அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை -உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை துறை- உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் இ.ஆ.ப., வேளாண்மை -உழவர் நலத்துறை இயக்குனர் வி. தட்சணாமூர்த்தி இ.ஆ.ப.,
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளர் முருகேசன் மற்றும் வேளாண்மை- உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, சர்க்கரைத் துறை, வேளாண்மைப் பல்கலைக்கழக உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.