கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங் களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் முகாமுக்கு பொறுப் பான கட்டளைத் தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா நேரடியாக சம்மந்தப்பட்ட காணிக்கு விஜயம் செய்து விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என திருகோண மலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமத் ஷெரிப் தெரிவித்தார்