பரமக்குடியைச் சேர்ந்த சிறுவன் த.சந்தோஷ் கண்ணா (வயது 8). இந்த சிறுவனின் தந்தை தண்டா யுதபானி. இவர் அரசு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து வருகிறார். தாயார் கார்த்திகா. இந்த சிறுவன் தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனின் தனித்திறமை என்ன வெனில் காரின் போட்டாவைக் காண்பித்தால் காரின் கம்பெனி மற்றும் அதன் பெயரையும் கூறி விடுவான். மேலும் பேப்பரில் வரும் மாவட்ட வாரியான கொரானா பாதிப்பையும் மனப்பாடமாக கூறி விடுவான்.
அதுபோல் எலெக்ட்ரானிக் பொருட்கள் 20 முதல் 30 பொருள்களை எளிதில் கூறி விடுவான். இவன் முதல் வகுப்பு படிக்கும்போதே எங்காவது செல்லும் போது அவரை கடந்து செல்லும் கார்களின் பெயரை அவனே கூறுவான். அந்த நிகழ்வு தான், கடந்த பிப்ரவரியில் நடந்த பள்ளியின் ஆண்டு விழாவில் தனித்திறன் நிகழ்வில் கலந்து கொண்டு எல்லாருடைய பாராட் டையும் பெற்றான். அசாத்திய நினைவாற்றல் கொண்ட இந்த சிறுவனின் திறமையை நாமும் பாராட்டுவோம். வாழ்த்து தெரிவிக்க +91 94430 20807