ஃபேக் கால்ஸ்களுக்கு முடிவு கட்டிய சென்னை காவல்த்துறை கமிஷனரை பாராட்டினார் அம்ரீஷ்

சென்னை கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஷ் அகர்வால் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். தேவையற்ற லோன் கால்ஸ், கிரெடிட் கார்டு தொல்லைகளால் அவதிப்படும் மக்களுக்கு ஆதரவாக, அவற்றை அதிரடியாக ஒழித்து வருகிறார். சென்னைக்கு அவர் ஒன்றும் புதிய முகமல்ல. ஏற்கனவே அவர் சென்னை காவல் துறையில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார். சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த போது, Night Crime To Zero என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இரவு நேர ரோந்து பணிகளை தீவிரமாக்கியவர். அவரின் அதிரடி பணிகளைக் கண்டு வியந்த இசையமைப்பாளர் அம்ரிஷ் அவரை நேரில் சென்று பாராட்டி உள்ளார். மக்கள் தொடர்பு: பிரியா