அசாமின் டின்சுகியாவில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் சத்தமும், வெப்பமும் உணரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு சுமார் மூவாயிரம் குடும்பங்கள் அழைத்து செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களில் யாரும் உயிரிழக்கவில்லை.
ஆனால் ஆயில் இந்தியா நிறுவனத்தின் மூன்று பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் காரணமாக அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக ஒரு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் இழப்பீடு தொகையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இதுவரை 2,756 குடும்பங்கள் இழப்பீடு தொகை வழங்குவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன.