125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் காலம் சென்ற இயக்குநர் இராமநாராயணன், இவரிடம் ராஜகாளியம்மன், கந்தா கடம்பா கதிர்வேலா மண்ணின் மைந்தன் ஆகிய வெற்றிப் படங்களில் உதவியாளராக பணிபுரிந்த எம்.முருகன் கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி “ஓட்டம்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “ஓட்டம்” படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் அறிமுகமாகிறார் தயாரிப்பாளர் ரவி ஷங்கர். இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, .ஜீ.வி.பிரகாஷ் ஆகியோரை அடுத்து இப்படத்தின் இசையை கவனிக்கும் எஸ்.பிரதீப்வர்மா இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். எ.ஸ்.பிரதீப்வர்மாவுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த பாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோஹி, கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா கதாநாயகி அறிமுகமாகிறார். சாய்தீனா, அம்பாளி சங்கர் இன்னும் பலரும் நடிக்கின்றனர். சென்னை, கோவை மற்றும் சிக்மகளூர் சக்கலேஷ்புராவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜோசப்ராவ் அளிப்பதிவையும், ராம்தேவ் சண்டைப்பயிற்சியையும், மஞ்சு நடினப் பயிற்சியையும், சற்குணமூர்த்தி. டி.பார்த்தசாரதி இருவரும் ஆன்லைன் தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர். “ஓட்டம்” திரைப்படத்தை ரிக் ரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் ஹேமா ரவிஷங்கர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி எம்.முருகன் இயக்குகிறார். இசையமைத்து தேனிலவு செல்லும் தம்பதிகள் சந்திக்கும் திகிலான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைக்களம் இது. இதில் மர்மம், திகில் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் பலவும் உள்ளதாக இயக்குநர் எம்.முருகன் கூறுகிறார். மக்கள் தொடர்பு: விஜயமுரளி. கிளாமர் சத்தியா.