அண்ணாநகர் பகுதியில் 14 வயது சிறுமியைஅழைத்துச் சென்று குடும்பம் நடத்தியசிறுமியின் உறவினர் கைது.

சென்னைஅண்ணாநகர் காவல் மாவட்டத்தில்வசித்து வந்த 14 வயது சிறுமியின் தாய் இறந்துவிட்டதால்அச்சிறுமியின் தாத்தாபாட்டி சிறுமியை வளர்த்துவந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று சிறுமி அவரதுபெரியம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடைக்குசெல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்துசிறுமியின் பெரியம்மா K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில்காணாமல்போன பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. K-3 அமைந்தகரை காவல் நிலையஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரவிசாரணை செய்ததில்காணாமல் போன சிறுமி ஒருஆண் நபருடன் சென்றது தெரியவந்ததுஅதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணைமற்றும் தேடுதலில் ஈடுபட்டுகாணாமல் போன சிறுமியைகடந்த 25.3.2021 அன்று கண்டுபிடித்து மீட்டு விசாரணைசெய்தனர். விசாரணையில்சிறுமியை அவரது மாமாசெல்வகுமார், வ/26, என்பவர் காதலிப்பதாகவும்திருமணம்செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்றுதிருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாகதெரிவித்தார். பின்னர் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நலஅமைப்பு வாரியம் மூலம் குழந்தைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்மேலும் மேற்படி வழக்கானது, W-7 அண்ணாநகர்அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றம்செய்யப்பட்டுகாணாமல் போன பிரிவில் பதியப்பட்டவழக்குபோக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் மாற்றம்செய்யப்பட்டது. W-7 அண்ணாநகர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரதேடுதலில் ஈடுபட்டுசிறுமியை அழைத்துச் சென்றுதிருமணம் செய்து தலைமறைவான செல்வகுமார், வ/26, த/பெ.கணேசன், எண்.19/13, அன்னை சத்யா நகர் முதல்தெருவில்லிவாக்கம்என்பவரை நேற்று (14.6.2021) கைது செய்தனர்விசாரணைக்குப் பின்னர் எதிரி செல்வகுமார்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுநீதிமன்ற உத்தரவுப்படிசிறையில் அடைக்கப்பட்டார்.