6.4.2021 அன்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோரை தலைமைக் கழகத்தில் இன்று (7.3.2021 – ஞாயிற்றுக் கிழமை), புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் சண்முகம் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, செயல் தலைவர் ரவிகுமார், பொதுச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் வெள்ளைச்சாமி, ஆகியோரும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் தனபாலன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, அமைப்புச் செயலாளர் சேலம் செல்லப்பன், மாநில செயலாளர் ஆசைதம்பி, துணைத் தலைவர் குருசாமி, குமரி மண்டல தலைவர் குமரி அன்புகிருஷ்ணன் ஆகியோரும், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, பொதுச் செயலாளர் தேவர், பொருளாளர் பாண்டியன், இணை பொதுச் செயலாளர்களான பிரபு, செந்தூர்பாண்டியன், மதுரை மாவட்டச் செயலாளர் பகவதி, இளைஞர் அணி தலைவர் பெரியதுரை ஆகியோரும், பசும்பொன் தேசிய கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கத் தேவர் தலைமையில், அக்கட்சியின் பொருளாளர் கண்ணன் ஆகியோரும், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் தலைமையில், அக்கட்சியின் இளைஞர் அணி மாநில அமைப்பாளர் லட்சுமணன், உயர்மட்டக் குழு உறுப்பினர் ஐயம்செழியன் ஆகியோரும், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் வேட்டை ரங்கநாதன், மாவட்டச் செயலாளர் ரமேஷ்பாபு, நிதி காப்பாளர் ஹரிஹரன், மாவட்டத் தலைவர் மாணிக்கசாமி, இளைஞர் அணியைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோரும், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் தலைமையில், அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் முகமது மஸ்தான், தலைமை நிலையச் செயலாளர் ஜாகிர் உசேன், மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது சயபுதீன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோரும்,. இந்திய தேசிய குடியரசு கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். அம்பேத்கர் பிரியன் தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் குழந்தைவேலு, செயலாளர் மெய்யழகன் ஆகியோரும், வீர முத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளான, கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சிவநேசன், மத்திய மண்டல பொருப்பாளர் குணா ஆகியோரும், தமிழ் தெலுங்கு தேசியக் கட்சியின் நிறுவனர் ராஜகுமார் நாயுடு நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.