அதிமுக கழக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தீர்மானம் : 1 “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”” என்று அருளிய வடலூர் வள்ளலார் அவர்களின் “ஜீவகாருண்யத்திற்கு” இலக்கணம் வகுத்து, தமிழக மக்களின் வாழ்வில் மாற்றத்திற்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து தமிழக மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டு, தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்டவரும், உலகத் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், இந்த உலகத்தில் இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தை வளர்த்து 6-வது முறையாக முதலமைச்சராக ஆட்சி நடத்தி மறைந்தும், மறையாமல் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் மங்காப் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கும், “மாணவச் சமுதாயத்தின் அட்சயப் பாத்திரம்” புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்த நாள் தினத்தில் அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலானவற்றை, கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
திரு.ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை “மாணவச் சமுதாயத்தின் எழுச்சி நாளாக” தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடுவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2. இந்தியாவின் முழுகெலும்பாக விளங்கும் விவசாயத்தை மேம்படுத்தவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் எண்ணிலடங்கா நலத்திட்டங்களை செயல்படுத்தி “பசுமைப் புரட்சிக்கு” வித்திட்டவர் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், என்றுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கழக அரசு விவசாயிகளின் உற்ற தோழனாக, விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட, ஏழை எளிய விவசாயிகள் நலன் பாதுகாக்க, கூட்டுறவுத் துறை வங்கிகள் மூலம் சுமார் 16.43 இலட்சம் விவசாயிகள் வாங்கியுள்ள “”””ரூ. 12,110 கோடி பயிர்க் கடன்களை தள்ளுபடி” செய்தும், விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து, தமிழக விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றிட கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் மற்றம் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

????????????????????????????????????

தீர்மானம் : 3. மத்திய காங்கிரஸ் அரசின் 16 ஆண்டுகள் பங்குபெற்று பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜீவாதார உரிமைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் அதிகார முறை கேடுகள், நில அபகரிப்புகள் முதலானவற்றின் உண்மைகளையும், குடும்ப வாரிசுகளுக்கே பல கட்சிப் பதவிகளை பங்கிட்டுக் கொடுத்து குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி ஜனநாயகத்தை பணநாயகத்தால் கேலிக் கூத்தாக்கி வருகின்ற தீயசக்தி தி.மு.க.வும், அதன் தலைவர் ஸ்டாலினும் பொய் அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திவிடலாம் என்றும், தி.மு.க. ஆட்சியின் போது கிராம மக்களை சந்திக்காத ஸ்டாலின் தேர்தலை மனதில் வைத்து கார்ப்ரேட் கம்பெனி துணையோடு தற்போது கிராம சபை கூட்டம் நடத்தி போலியாக மக்களை ஏமாற்றி விடலாம் என்றும், மேற்கொண்டு பொதுமக்களை நம்ப வைத்துவிடலாம் எனவும், தினந்தோறும் வெற்று அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தீயசக்தி மு.க. ஸ்டாலினின் முகத்திரையைத் கிழித்திடும் வகையில், நடைபெற இருக்கின்ற 2021 சட்டமனற் பொதுத் தேர்தலில் சுயநலவாதிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கம் தி.மு.க. தலைவர்
ஸ்டாலினும், காங்கிரசும் எந்த ரூபத்தில் வந்தாலும், தமிழக மக்கள் அவர்களை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டுமாய் கழக மாணவர் அணி வேண்டி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4. “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற உயர்ந்த நற்சிந்தனையோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடித் திட்டங்களையும், முன்னேற்றத் திட்டங்களையும் இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழகத்தை சிறந்த மாநிலமாக, சிறப்பான முதன்மையான முன்னோடி மாநிலமாக”அமைதி – வளம் – வளர்ச்சி” என்ற பாதையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் தலைமையிலான கழக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளாக தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளான காவேரி நடுமன்றத்தின் உச்சநீதிமன்றம் மூலம் போராடி மத்திய அரசிதழில் வெளியிட செய்தது, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கையில் உறுதி, சமூக நீதி காக்கும் வகையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5ரூ இட ஒதுக்கீடு, 2-ம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3,09,000/- கோடி முதலீடு &டவ;ர்ப்பு, சுற்றுச் சூழல் திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், கல்லூரி மாணவர்கள் கொரனா காலத்தில் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க விலையில்லா 2ழுக்ஷ டேட்டா வழங்கும் திட்டம். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணம் முழுவதும் அரசே ஏற்பு, விலையில்லா மிதிவண்டிகள், மடிகணினிகள், நோட்டு புத்தகங்கள், கட்டணமில்லா பேருந்து அட்டைகள், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், மக்கள் சுதாகார நலன் காக்க 2000 அம்மா மினி கிளினிக், உழவர் பாதுகாப்பு திட்டம், 1100 என்ற தொலைபேசி எண் மூலம் முதலமைச்சரின் சிறப்பு குறைத் தீர்க்கும் திட்டம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கும் ஊக்க தொகை அதிகரிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு, உழைக்கும் மகளிர்களுக்கு ரூ. 25,000/- மானியத்துடன் அம்மா இருசக்கர வாகன திட்டம் என பல்வேறு முன்னோடி திட்டங்களை இந்திய நாட்டிற்கே அறிமுகம் செய்து இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத சாதனைகளை செய்து, தெற்காசியாவிற்கே முன் மாதிரியாக அன்னை தமிழகத்தை ஏழை – எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி வருகின்ற கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் தலைமையிலான கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டிதொட்டியெங்கும் சாதனை விளக்க பிரச்சாரத்தின் வாயிலாக, 2021-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெறவும், தீயசக்தி தி.மு.க.வை விரட்டியடித்தும் மூன்றாவது முறையாக அம்மா அவர்களின் ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் தலைமையில் பொறுப்பேற்கும் வகையில் தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு பகல் பாராமல் களப்பணியாற்றுவோம் என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.

தீர்மானம் : 5. தமிழக மக்களின் மேன்மைகளையும், வளர்ச்சியையும் மட்டுமே தன் வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு செயலாற்றி, மாணவ சமுதாயத்தின் அட்சயப் பாத்திரமாகத் திகழ்ந்து, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையில் செயல்படும் கழக அரசு தெற்காசியாவே வியக்கும் வகையில், இந்தியாவின் எந்தவொரு மாநில அரசம் செய்திடாத திட்டங்களை நித்தம் – நித்தம் சிந்தித்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், நெசவாளர்கள் மனநிறைவு பெறவும், ஏழை-எளிய மக்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தவும், இளைஞர்கள், மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்பு பெற்று விளங்கவும், தமிழக மக்களின் மேன்மை, வளர்ச்சி பெறவும் பல்வேறு முன்னோடி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் தமிழக மக்களின் இல்லங்கள் தோறும் திண்ணை பிரச்சாரம் வாயிலாகவும், துண்டு பிரச்சாரம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி றுhயவளயீயீ மூலம் மாணவர்கள் குழுக்கள் ஏற்படுத்துதல், குயஉநbடிடிம, கூறவைவநச, ஐளேவசயபசயஅஅந, கூநடநபசயஅ மூலம் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைப்பதும், தீயசக்தி தி.மு.க. மற்றும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து, நடைபெற இருக்கின்ற 2021-ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 100ரூ முழுமையான வெற்றியைப் பெற்று புதிய வரலாற்றுச் சரித்திரம் படைத்திட தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு கழக பணியாற்றுவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.

????????????????????????????????????

தீர்மானம் : 6. “பெரிதினும் பெரிது கேள்” என்ற மகாகவி பாரதியின் சொல்லிற்கு ஏற்ப தனது சிந்தனையில் செம்மையாய் ஏற்றவர் தான் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் பிற மாநில ஆட்சியாளர்களெல்லாம் பார்த்து பின்பற்றும் வகையில், ஏற்றமிக்கதோர் மக்கள் நலத்திட்டங்களான 100 நாள் வேலை திட்டத்தில் பயன் அடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 12.5 லட்சம் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் மூலம் பயனடைந்தோர் எண்ணிக்கை 2.8 லட்சம் 67.09 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 18,000 நிதியுதவி தமிழகத்தில் 33.07 லட்சம் மூத்த குடிமக்களுக்கு ரூ. 1000 மாத ஓய்வூதியம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50ரூ இட ஒதுக்கீடு கொரானா கால கட்டத்திலும் தொழில் முதலீட்டில் தமிழகம் முதலிடம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியா டுடே ஆய்வில் சிறந்த மாநிலம் நல் ஆளுமையில் தமிழகம் முதலிடம் 30 ஆண்டுகளில் இல்லாத மகசூல் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் குடிமராமத்து திட்டம் மூலம் 5586 நீர்நிலைகள் மீட்பு நீர் மேலாண்மையில் நம்பர் 1 இடம் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி 50 வருட காவிரி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு உணவு தானிய உற்பத்தியில் 5 முறை மத்திய அரசின் விருது என தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடி, முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 7. தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெறவும், தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெறவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். கழக அரசு 20 தொழில் நிறுவனங்களுடன், 46 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ. 33,500 கோடி முதலீட்டில் 2,00,000 இளைஞர்கள் மறைமுக மற்றும் நேரடி வேலைவாய்ப்புகள் பெறவும், 4 சிட்கோ, 6 டிட்கோ தொழில்பேட்டை தொடங்கவும் அனுமதியளித்து தொழிற்புரட்சியில் நவீன தொழில்நுட்ப யுத்திகளுக்கு வித்திட்டு, இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகை செய்துள்ள கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களுக்கும், கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.