வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.
நேற்று அதிகாலை நிலவரப்படி, ஒடிஸா மாநிலம் பாரதீப்க்கு வடகிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், பாலசோருக்கு தென்கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் திகாவுக்கு தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
புயல் தொடர்ந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகர்தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே நேற்று நண்பகலில் யாஸ் புயல் கரையைக் கடந்தது.