வக்ஃபோர்டு அதிகாரிகளுக்கும், வக்ஃபோர்டு ஊழியர்களுக்கும், மட்டும் அல்லாது
வக்ஃபோர்டுக்கு தலைவராக, (சேர்மெனாக) உறுப்பினர்களாக வரத்துடிக்கின்ற ஜாம்பவான்களுக்கும் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களைபோன்ற தெளிவான நடவடிக்கை வரவேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளிப்படுத்துகிறேன்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான 5-ந்து ஏக்கருக்கும் அதிகமான கோயில் சாலிகிராமத்தில் உள்ளது, வடபழனி முருகன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களிடமிருந்து மீட்டெடுக்க, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் 48 மணி நேரத்திற்குள் அந்த இடத்தை விட்டு காலிசெய்ய வேண்டுமென அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கெடு விதித்துள்ளார், திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேட்டியளிக்கும்போது இது வெறும் டிரைலர்தான் மெயின் பிக்சரை மிக விரைவில் பார்ப்பீர்கள் என்று கம்பீரமாக பேசியது தி.மு.கழக நல்லாட்சிக்கான டிரைலரை மட்டும் அல்லாது மெயின் பிக்சரையும் பார்க்க முடிகிறது.
“வக்ஃபோர்டு சொத்துக்களை மீட்டெடுக்காத அதிகாரிகளும்” “வக்ஃபோர்டு சொத்துக்களை மீட்டெடுக்காத ஊழியர்களும்” “வக்ஃபோர்டு சொத்துக்களை மீட்டெடுக்காத சேர்மென்களும்”
“வக்ஃபோர்டு சொத்துக்களை மீட்டெடுக்காத உறுப்பினர்களும்” “வக்ஃபோர்டு சொத்துக்களை மீட்டெடுக்காத முஸ்லிம் சமுதாயத்தினரும்” தெளிவில்லாதவர்களாக வாழ்ந்து (மைத்தாகி கபரஸ்தானில் அடக்கமாவது) மாண்டுபோவது முஸ்லிம்களுக்கானஅடையாளமல்ல.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் வக்ஃபோர்டுக்கு சொந்தமான இடங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வக்ஃபோர்டுக்கு சொந்தமான இடங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளது . இந்திய நாடெங்கிலும் வக்ஃபோர்டுக்கு சொந்தமான இடங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ளது. வக்ஃபோர்டு துறையில் சம்பளத்தையும் கிம்பளத்தையும் பெற்று ஓய்வு பெற்றவர்கள் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களைப்போன்று வக்ஃபோர்டு நிலங்களை இடங்களை மீட்டெடுக்க இதுநாள்வரை டிரைலரைக்கூட வெளிப்படுத்த தெளிவு இல்லாதவர்களாகவே வாழ்வது ஏனோ.
முஸ்லிம்களில் பெரும்பாண்மை முஸ்லிம்களின் வாக்குகளால் கிருஸ்துவர்களில் பெரும்பான்மை கிருஸ்துவர்களின் வாக்குகளால்ஆட்சி அதிகாரத்தை சுவைத்துவரும் தி.மு.கழக ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்ற (வக்ஃபோர்டு சேர்மெனாக வரத்துடிக்கின்ற) வக்ஃபோர்டு தலைவராக பொறுப்பேற்க போட்டிபோட்டு காத்திருப்பவர்கள் எந்த முஸ்லிம் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், எந்த முஸ்லிம் இயக்கத்தை சார்ந்தவராக இருந்தாலும், எந்த முஸ்லிம் அமைப்பை சார்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், “மஸ்ஜிதுகளுக்கு சொந்தமான இடங்களை நிலங்களை” “தர்காக்களுக்கு சொந்தமான இடங்களை நிலங்களை” “மதரஸாக்களுக்கு சொந்தமான இடங்களை நிலங்களை” “கபரஸ்தான்களுக்கு சொந்தமான இடங்களை நிலங்களை”
“வக்ஃபுக்கு சொந்தமான இடங்களை நிலங்களை” ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க(இந்து அறநிலையத்துறை அமைச்சர்) திரு.பி.கே.சேகர்பாபு அவர்களை போன்ற தெளிவான திறமையான நபர்களே வக்ஃபோர்டு துறையின் சேர்மெனாக வருவதற்கு தயாரானவர்களாக இருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
இறைவனை வணங்கி வாழ்வோம் இல்லாதோர்கு வழங்கி வாழ்வோம் எல்லோரிடமும் இணங்கி வாழ்வோம். துபாயிலிருந்து ஜனாப். ஆசாத் அலி.