அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் வகையில் அரசு எந்திரமும் சீரமைக்கப்பட்டுள்ளது.
அவசரக் கடமைகள் அடுக்கடுக்காக அணி வகுத்து வந்த போதிலும் மேற்கு மாவட்டங்களுக்கு முதல்வர் இரண்டு முறை ஆய்வுப்பயணம் செய்திருப்பது புது வரலாறாகும். கொரோனா நோயாளி என்றால் அனைவரும் ஒதுங்கி, பதுங்கி வரும் நேரத்தில் முதலமைச்சர் மருத்துவ பாதுகாப்பு உடையணிந்து, உள் நோயாளர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்து, குணமடைய வாழ்த்துக் கூறியது, அவர்களுக்கு மட்டும் அல்ல நாடு முழுவதும் கோவிட் 19 பாதிப்பில் உள்ள அனைவருக்கும் தெம்பூட்டி. நம்பிக்கையூட்டும் செயலாகும். நேற்று, கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்து விடும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும. இந்தப் பணத்தை 18 ஆவது வயதில் வட்டியுடன் மீளப் பெற்றுக் கொள்ளலாம். பெற்றோர்களை இழந்த நிலையில் குழந்தைகள் பட்டப்படிப்பு வரை கல்வி கட்டணம், உணவுக் கட்டணம் உட்பட விடுதிக் கட்டணத்தை அரசே செலுத்தி வரும். நெருங்கிய உறவினர்கள் அல்லது நம்பகமான பாதுகாவலர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் மூன்றாயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டது நோயை எதிர்த்துப் போராடும்
நெஞ்சுரத்தை வலுப்படுத்தும் வரவேற்கதக்க நடவடிக்கையாகும். ஜனநாயக நெறிமுறைகளில் நின்று, புதிய வகையில் செயல்படும் முற்றிலும் புதுவகைப்பட்ட மக்கள் அரசை கட்டமைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்தி வரவேற்கிறது.

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு