சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்ற முகவரியில்வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் கடந்த (23.05.2021) மாலைசுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் கிடந்த கவரை எடுத்து பார்த்தபோது அதில் பணம் ரூ.20,000/- இருந்துள்ளது. பணத்துக்கு உரிமையாளர் யார் என்று தெரியாததால் உடனே கரிமுல்லாஅப்பணத்தை அருகில் உள்ள H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் நேர்மையாக காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேற்படி பணம் குறித்து H-6 ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினர் விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை ஆய்வு செய்ததில் கடந்த 23.05.2021 அன்று ஆர்.கே.நகர், நேரு நகர் 3 வது தெரு, கீதா ஸ்டோர் எதிர்புறம் சக்திவேல், வ/67 என்பவர் செல்போன் பேசுவதற்காக பையில் இருந்துசெல்போனை எடுத்தபோது கவரில் கட்டப்பட்ட நிலையில் இருந்த பணம் கீழே விழுந்துள்ளதும், பின்னர் அந்த கவரில் உள்ள பணத்தை மேற்படி கரிமுல்லா என்பவர் எடுத்துள்ளதும்தெரியவந்தது.
அதன் பேரில் உரிய விசாரணைக்குப் பிறகு, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மகாவிஷ்ணு அவர்கள் பணத்திற்குஉரிமையாளரான சக்திவேல், வ/67, த/பெ.மாரியப்ப நாடார், எண்.186/2, MS கோயில் தெரு, இராயபுரம், சென்னை என்பவரிடம் அவர் தவறவிட்ட பணம் ரூ.20,000/- ஐ நேற்று (25.05.2021) ஒப்படைத்தார்.
மேலும் நேர்மையாக கீழே கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக, செயல்பட்ட கரிமுல்லாவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், இணை ஆணையாளர்(வடக்கு) திரு.A.T.துரைகுமார்,இ.கா.ப., அவர்கள் நேற்று முன்தினம் (24.05.2021) அன்று நேரில்வரவழைத்து கரிமுல்லாவிற்கு பண வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது