புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் செம்பாட்டூரில் விவசயாத் தொழிலில் ஈடுபட்டிருந்த போது குறிப்பாக பெண்கள் அதிகம் பேர் பணியாற்றும் இடத்தில் இடி விழுந்து தாக்கியதில் நான்கு பெண்கள் அதே இடத்தில் உயிர் இழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காய முற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திடீர்விபத்தில் மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா 10 லட்சம் ரூபாயும் அதேபோல் இவ்விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், கனிசமான உதவித் தொகையையும் வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள் கிறேன். டில்லியில் நடைபெறும் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள நான் டில்லி வந்துள்ளதால் நேரில் உடன் செல்ல இயலாததால் உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அவர் களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.