இணையம் மற்றும் மொபைல் சேவைகள். ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் சமூக ஊடகங் களின் பயன்பாட்டின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இது இணைய குற்றங்களையும் அதிகரித்துள்ளது. ஓடிபி மோசடி, இணைய வழி மூலம் பின்தொடர்தல், சமூக ஊடகங்களில் பெண்களைத் துன்புறுத்துவது, ஆபாச பதிவுகள், சாதி, மதம் போன்றவற்றின் அடிப்படையில் தவறான மற்றும் பிளவுபடுத்தும் பதிவுகள் தொடர்பான சைபர் குற்றங்கள் பெரும்பாலும் பதிவா கின்றன. சைபர் குற்றங்கள் தோன்றுவதை கருத்திற்கொண்டு, 2003-ம் ஆண்டில் சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவில், ஒரு சைபர் குற்றப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதுவரை, சென்னை நகரத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான அனைத்து புகார்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவில் தீர்க்கப்படுகின்றன. புகார்தாரர்கள் சென்னை நகரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மத்திய குற்றப்பிரிவு, வேப்பேரிக்கு செல்ல வேண்டும். காவல் துணை ஆணையாளர்கள் தலைமையக காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்க வசதியாக, தமிழக முதலமைச்சர் சென்னை காவல்துறையின் 12 காவல் மாவட்ட தலைமையக காவல் நிலையங்களில் சைபர் பிரிவுகளை அமைக்க உத்தரவிட்டார். சைபர் குற்றப்பிரிவு, 1-8-2020 முதல் காவல் துணை ஆணையாளர்கள் தலைமையக காவல் நிலையத்தில் செயல்படத் தொடங்கும். அவை முறை யே மயிலாப்பூர் காவல் நிலையம் (மயிலாப்பூர் மாவட்டம்), கீழ்ப் பாக்கம் காவல் நிலையம் (கீழ்ப்பாக்கம் மாவட்டம்), சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் (திருவல்லிக்கேணி மாவட்டம்), மாம்பலம் காவல் நிலையம் (தியாகராய நகர் மாவட்டம்), அடை யாறு காவல் நிலையம் (அடையாறு மாவட்டம்), புனித தோமையார் மலை காவல் நிலையம் (புனித தோமையார் மலை மாவட்டம்), அண்ணா நகர் காவல் நிலையம் (அண்ணா நகர் மாவட் டம்), ஆவடி காவல் நிலையம் (அம்பத்தூர் மாவட்டம்), ஓட்டேரி காவல் நிலையம் (புளியந்தோப்பு மாவட்டம்), வடக்கு கடற் கரை காவல் நிலையம் (பூக்கடை மாவட்டம்), புதிய வண்ணாரப் பேட்டை காவல் நிலையம் (வண்ணாரப்பேட்டை மாவட்டம்), மாதவரம் பால் பண்ணை காவல் நிலையம் (மாதவரம் மாவட்டம்). 31-7-2020) இந்த வசதியை சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் மகேஷ் குமார் அகர்வால், காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார்.
புகார்தாரர்கள் தாங்கள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் மாவட்ட தலைமையகத்தை அணுகி, தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த வசதி சைபர் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேற்படி பிரிவுகள் திறனுடன் செயல்பட உறுதி செய்வதற்காக, இந்த பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்ட பணியாளர் களுக்கு பயிற்சி அளிக்க ஒரு பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது. மத்திய குற்றப்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள், இந்த பிரிவுகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவர். முக்கிய மான மற்றும் சிக்கலான தன்மையுள்ள புகார்களை இந்த பிரிவுகளிலிருந்து மத்திய குற்றப்பிரி வின் சைபர் குற்றப்பிரிவிற்கு பரிந்துரை செய்வர்.