இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் நேற்று கேபிள் கார் ஒன்று நடுவழியில் அறுந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் சுற்றுலாப்பயணிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக இத்தாலி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.