பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு இந்திய நாடுமுழுவதும் பரவிக்கிடக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியனவற்றைதனியாருக்கு விற்க, தனியார்மயமாக்க எடுத்து வரும்நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1937-ல்தொடங்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போதுதமிழ்நாட்டில் சுமார் 1500-க்கும் மேற்பட்டகிளைகளோடு குக்கிராமங்கள் வரை பரவலாகசெயல்படக் கூடிய வங்கியாக சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதே போல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவங்கியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்கிகள் இணைப்பு என தொடங்கி சிலவங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்து, தற்போதுபெரிய வங்கிகளை தனியார் மயமாக்குவதால்வங்கிகளின் வரவு செலவு மற்றும் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு சில தனிப் பெரும்முதலாளிகளிடம் ஒப்படைத்து மக்கள் தனியாரிடம்கையேந்தும் நிலைக்கு தள்ளப்படப் போகிறார்கள்,
காங்கிரஸ் அரசு அன்னை இந்திராகாந்திஅம்மையார் தலைமையில் தனியார் வங்கிகளைதேசிய உடமையாக்கியது. ஆனால் இன்றோ மத்தியபா.ஜ.க அரசு முற்றிலும் எதிர்மறையாகதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்கி இந்த தேசத்தை 40 ஆண்டுகளுக்குபின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறது. இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும்பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான அவர்களின் குடும்பத்தினர்மட்டுமின்றி பல கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே வங்கிகள் தனியார்களுக்கு விற்க இருக்கும்முடிவை பொது மக்களின் நலன் கருதி மத்திய அரசுஉடனடியாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.