இந்தியாவின் வான்வெளிப் பயணத்தில் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியாரையும் ஈடுபடுத்தவிருப்பதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விண்வெளித் துறையில் ஏற்படுத்திவரும் வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தங்களை நினைவு கூர்ந்த அமைச்சர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக எதிர்காலத்தில் விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களின் ஆய்வுகளில் தனியார் துறையும் ஈடுபடுத்தப்படும் என்று கூறினார்.

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் தன்னிறைவு அடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். விண்வெளிக்குச் செயற்கைக் கோளைச் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்
என்று அமைச்சர் கூறினார்.