இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்மீக தலைவர்களின் உதவியை நாடுகிறார் இந்திய பிரதமர் மோடி

சுதந்திர போராட்டத்துக்கான அடிப்படையை பக்தி இயக்கம் வழங்கியது போல், இன்று தற்சார்பு இந்தியாவுக்கான அடிப்படையை நமது நாட்டின் முனிவர்கள், மகாத்மாக்கள், மடாதிபதிகள், ஆச்சார்யாக்களால் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜெயினாச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகராஜின் 151-வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக ‘அமைதிக்கான சிலையை’ காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து பேசினார். சுதந்திர போராட்டத்தில் ஏற்பட்டது போல், தற்சார்பு இந்தியா சூழலுக்கும், சமூக-அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மத மற்றும் ஆன்மீக அடித்தளம் குறித்து பிரதமர் வலியுறுத்தியது, அவரது பேச்சின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது. உள்ளூர் பொருட்கள் வாங்குவதற்கு குரல் கொடுப்பதை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திர போராட்டத்தின் அடித்தளத்தை பக்தி இயக்கம் வலுப்படுத்தியது என்றார். நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் சாமியார்கள், மடாதிபதிகள், முனிவர்கள் மற்றம் ஆச்சார்யாக்களால் தூண்டப்பட்டனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், இந்த உணர்வு, சுதந்திர போராட்டத்துக்கு மிகுந்த பலத்தை வழங்கியதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அதேபோல், தற்சார்பு இந்தியாவையும் பிரபலப்படுத்த வேண்டும் என ஆன்மீக தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வோண்டுகோள் விடுத்தார். சுதந்திர போராட்டத்தின் அடித்தளம் பக்தி இயக்கத்தால் உருவாக்கப்பட்டது போல், இன்று 21ம் நூற்றாண்டில், தற்சார்பு இந்தியாவின் அடித்தளத்தை சாமியார்களும், மடாதிபதிகளும், ஆச்சார்யாக்களும் உருவாக்க வேண்டும் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆன்மீக கூட்டங்களில் சீடர்களிடம் உரையாற்றும்போது, உள்ளூர் பொருட்களை வாங்க ஆன்மீக தலைவர்கள் போதிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு குரல் கொடுக்கும் இந்த தகவல், ஆன்மீக தலைவர்களின் ஒப்புதலுடன் வலுப்பெறும் என்றும், சுதந்திர போராட்டத்துக்கு ஊக்கமளித்தது போல், தற்சார்பு இந்தியாவையும், இந்த வேண்டுகோள் ஊக்குவிக்கும் என நரேந்திர மோடி கூறினார்.