இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவாக 45,674 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக சிகிச்சை பெறுபவர்களை விடவும் குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 37-வது நாளாக இன்றும் இதே நிலை நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 49,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாட்டில் 5,12,665 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும். இதுவரை 78,68,968 பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். நாட்டில் குணம் அடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்.