தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, இன்று 4,80,719 ஆக இருந்தது. மொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது. தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய அரசின் விதிமுறைகளை மாநில/யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதால், புதிதாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களாக தினசரி சராசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதேபோல, குணமடைதல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து இன்று 93%-ஐ தாண்டியது. தேசிய மொத்த விகிதம் 93.05% ஆகும். நோயிலிருந்து குணம டைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,63,572 ஆக இருந்தது. குணமடைபவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 76,82,853 ஆக உள்ளது. புதிதாக குணமடைந்தவர்களில் 75.38% பேர் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்றிலிருந்து 6,498 பேர் குணமடைந்துள்ள நிலையில், தில்லி முதலிடத்தில் உள்ளது. 6,201 பேர் குணமடைந்து, கேரளா இரண்டாம் இடத்திலும், 4,543 பேருடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் 76.38% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், தில்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். தில்லி, மே.வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது.