இந்தியாவில் 2021 மே மாத மொத்த ஜிஎஸ்டி வருவாய்  ரூ 1,02,709 கோடி 

2021 மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வசூல்  1,02,709 கோடியாக உள்ளது. இதில் சிஜிஎஸ்டி  17,592 கோடியாகவும்எஸ்ஜிஎஸ்டி  22,653கோடியாகவும்ஐஜிஎஸ்டி  53,199 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான  26,002 கோடியாகவும் சேர்த்து) மற்றும் செஸ்  9,265 கோடியாகவும் (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான  868 கோடியாகவும் சேர்த்து) உள்ளது.  கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே மாதத்திற்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமத கட்டண தள்ளுபடி/வட்டி குறைப்பு (15 நாட்களுக்கு) உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில்ஜூன் 4 வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் இதுவாகும். ஐஜிஎஸ்டியில் இருந்து செய்யப்படும் வழக்கமான பைசலான சிஜிஎஸ்டிக்கு  15,014 கோடியையும்எஸ்ஜிஎஸ்டிக்கு 11,653 கோடியையும் இந்த மாதத்தின் போது அரசு வழங்கியது. கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போதுஜிஎஸ்டி வருவாய் இந்தாண்டு 65 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும் போதுசரக்கு இறக்குமதி மூலம் வசூலான வருவாய் 56சதவீதம் அதிகமாகவும்உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலான வருவாய் 69 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. தொடர்ந்து எட்டாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ 1லட்சம் கோடியை தாண்டியுள்ளது.