இந்தியா – பிரிட்டன் இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிரி்ட்டனில் உரு மாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேக மாகப் பரவியதையடுத்து, கடந்த மாதம் 20-ம் தேதி ஐரோப்பிய நாடுகள் பிரி்ட்டனுக்கு விமானச் சேவையை நிறுத்தின. இதை யடுத்து இந்தியாவும் கடந்த 23-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிவரை பிரிட்ட னுக்கு விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்தியது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு 29 பயணிகளுக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரிட்டனுக்கு விமானப்போக்குவரத்து சேவையை வரும் 7-ம் தேதிவரை நிறுத்தி மத்திய அ ரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய விமானப் போக்கு வரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டுவரப்படும், இரு நாடுகளுக்கும் இடையே குறைந்த அளவு விமானப் போக்குவரத்து இயக்கப்படும் எனத் தெரிவித்தது. பிரிட்டனுக்கு விமானப் போக்கு வரத்து தொடங்கப்பட்டபின் வாரம் 70 விமானங்கள் இருதரப்பிலும் இயக்க முடிவு செய்யப் பட்டது. ஆனால், உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து வாரம் 30 விமானங்கள் மட்டுமே இயக்க முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ட்விட்டரில் அளித்த விளக்கத்தில் “இந்தியா, பிரி்ட்டன் இடையே விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி முதல் தொடங்கும். இந்தியாவிலிருந்து 6-ம் தேதி பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும், பிரிட்டனிலிருந்து 8-ம் தேதி டெல்லிக்கு விமானம் இயக்கப்படும். வாரத்துக்கு 30 விமானங்கள் இயக்கப்படும். இந்தியத் தரப்பில் 15 விமானங்களும், பிரிட்டன் தரப்பில் 15 விமானங்களும் இயக்கப்படும். இந்தத் திட்டம் வரும் 23-ம் தேதிவரை அமலில் இருக்கும். அதன்பின் சூழலை ஆய்வு செய்து அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.