இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென் பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனராக, திரு எம்.வி.எஸ்.டி பிரசாத ராவ், இன்று (ஜூலை 09, 2020) பதவி ஏற்றுக் கொண்டார். தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றின் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
திரு. எம்.வி.எஸ்.டி பிரசாத ராவ், இந்திய தர நிர்ணய அமைவனத்தில், டெல்லி, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி யுள்ளார். மேலும் துணை தலைமை இயக்குநராக (தெற்கு மண்டலம்) பொறுப்பேற் பதற்கு முன்பு, அவர் புதுடில்லியில் டி.டி.ஜி (மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உரிமம் , எஃப்.எம்.சி.டி மற்றும் ஹால்மார்க்கிங் துறைகளின் தலைவராக இருந்தார் என்று சென்னை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குனர் திரு.எச். அஜய் கன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.