இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு பெண்கள் பிரிவில் 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக இப்பெண்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து வருகின்றனர். இதன் முக்கிய நோக்கம் பெண்கள் தங்களின் திறமைகளை அனைத்து துறைகளிலும் பெண்களுக்குள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பது. 5-11-2019 அன்று, இந்த அமைப்பு சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சி ஒன்றை திருமதி.தீபாளி கோயல் தலைமையில் நடத்தியது. இதில் தில்லியை சேர்ந்த திரு.ஹர்ஜென்டர் கவுர் கலந்துகொண்டார். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப. அவர்களிடம் “காவலர்களின் நலன்” என்ற தலைப்பில் கலந்துரையாடினர். சமூகம் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்பி சம்பந்தபட்டவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது இந்த கூட்டத்தின் நோக்க மாகும். ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் ஒட்டுமொத்த உடல் மற்றும் நல ஆரோக்கியத்தை மேம்படுத்தி குடிமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு இடையே உள்ள பல கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒரு இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பெண்கள் பிரிவின் தலைமையில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. அவர்களது நலன் மற்றும் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்.
2. ஒவ்வொரு பெண் காவலருக்கும் தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல்
3. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் புகார்தாரரோடு வரும் குழந்தைகள் விளையாட தனி இடம் ஒதுக்குதல்
4. அம்மா ரோந்து பணிக்காக ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் வாகனம் இயக்குவதில் பயிற்சி அளித்தல்
5. குடிசைப் பகுதிகளிலுள்ள பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையை உயர்த்தி அவர்களது திறமையை வளர்க்க துணை ஆணையர் தலைமையில்
இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவினருக்கு உறுதுணையாக இருக்கும்
6. பாதுகாப்பு நலன் கருதி காவலன் செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குடுடீ அமைப்பு இதுவரையில் 214 காவல் ஆளிநர்களுக்கு மென்திறன் பயிற்சி அளித்துள்ளது. 11 அனைத்து மகளிர் நிலையங்களை சேர்ந்த 71 பெண் காவல் ஆளிநர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஆலோசனை கள் சென்னை சமூக சேவை நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட 8 அதிகாரிகள் மூலம் இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அமைப்பின் சென்னை பிரிவு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இந்த பயிற்சியை அளிக்க தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.