கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியுப் சேனலில் இந்துக்களின் சமய நம்பிக்கையை கொச்சைப் படுத்தி தொடர்ந்து விடியோ வெளியிட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துக்களின் சமய நம்பிக்கைகள், இறை அடியார்கள் தொடர்ந்து இழிவு படுத்துவது அதிகரித்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது. பொய்யும் புரட்டும் கேவலமான சிந்தனையும் இந்துக்களின் சமய நம்பிக் கைகள் மீது திணிக்கப் படுகிறது. இது குறித்து இந்து முன்னணி தொடர்ந்து புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்து வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் புகார் அளித்து, வழக்குத் தொடர்ந்தாலும் நீதி கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இந்து சமய நம்பிக்கைகளை, இறை அடியார்களை கொச்சைப்படுத்தி வந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, நீதமன்றம் மூலம் தண்டனை தராத நிலையில் இந்து விரோதிகளுக்கு, துரோகிகளுக்கு மீண்டும் மீண்டும் கொச்சைப்படுத்த துணிச்சல் வருகிறது. இந்த கறுப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டம், கொரோனா நோய் அச்சத்திலிருந்து மக்கள் மீள பெரும்பாலான மக்களால் பாராயணம் செய்யப்பட்டு வரும் கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி, அநாகரிகமாக விடியோ வெளியிட்டுள்ளது. இதற்கு இந்து சமுதாயத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலத்தரப்பிலிருந்தும் கண்டன குரல் எழுந்துள்ளது. தாமதமானாலும் கண்டனம் தெரிவித்த அனைவருக்கு மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 1947இல் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த போதும், இந்துக்களுக்கு இன்னமும் சுதந்திர கிடைக்கவில்லை. அநாகரிமான, கேவலமான வசை மொழிகள் இந்து சமயத்தை குறிவைத்து தாக்கப்படுவது தொடர்கிறது. இதனை எதிர்த்து போராடினால் மட்டுமே, இந்துக்கள் சுதந்திரமாக தத்தமது மத நம்பிக்கைகளை காத்துக்கொள்ள முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்து சமுதாயம், மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு, போராட முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. என்று தனது அறிக்கையில் இராமகோபாலன் தெரிவித்துள்ளார்.