இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தொpவித்ததாவது: செப்டம்பர் 11ஆம் நாள் இமானு வேல் சேகரன் நினைவு தினம் அனுசாpக்கப்படுவதை முன்னிட்டு போதிய பாதுகாப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக அஞ்சலி செலுத்த வருவோர் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றிட அறிவுறுத் தியுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற்று 5 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து அஞ்சலி செலுத்தலாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமுதாய பிரதிநிதிகளுடன் ஆலோசனை க் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை யாக 3960 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் துணை வட் டாட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர கால சூழலை எதிர்கொள்ள ஏதுவாக 2 மருத்துவக் குழுக்கள்ரூபவ் 3 ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நகரின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்திட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருவோருக்கு தேவையான குடிநீர் வசதி தற்காலிக கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பி.இந்திரா நகராட்சி ஆணையாளர் (பொ) இராமநர் உட்பட வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.