இராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகன் குளத்தில், ஆற்றங் கரையில், கடலோரப் பகுதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓஎன்ஜிசி யின் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணி என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காவிரி டெல்டாவை ஒட்டியுள்ள அடுத்தடுத்த மாவட்டங்களில் ஓஎன்ஜிசி எண்ணை எரிவாயு ஆய்வு என்று திட்டங்களை அமலாக்கலாம் என்றும், கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் எதிர்ப்பில்லாமல் செயல்படுத்தி விடலாம் என தமிழ்நாடு அரசும், ஓ.என்.ஜி.சி யும் கருதி செயல்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரியவகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட பல்வேறு கடல்சார் உயிரினங்கள் உள்ளன. மேலும் இராமநாதரபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி சித்தி ரங்குடி மேலச்செல்வனூர் கீழச்செல்வனூர் ஆகிய ஊர்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளது. இந்த பகுதிகளை ஒட்டி தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் அழகன்குளம் உள்ளது. 1986 முதல் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகன்குளத்தில் 7 கட்டமாக அகழ்வாய் வுகள் நடந்துவருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாகவே எண்ணெய் எரிவாயு மீத் தேன் திட்ட ஆய்வு பணிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அழகன்குளம், ஆற்றங்கரை உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எரிவாயு கிணறுகள் அமை க்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு எரிவாயு கிணறுகள் அமைக்கப் படு வதால் விவசாய நிலங்களுடன், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல் வேறு பல்லுயிர் பெருக்கமே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் மிகப் பெரிய சுற்றுச் சூழல் மற்றும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 எண்ணெய் எரிவாயு கிணறு அமைப்பதற்கான. கருத்துக் கேட்புக் கூட்டம் 2015 மே 14ஆம் தேதி நடைபெற்ற பொழுது தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சுற்றுசூழல் செயற்பாட்டாளர் இரமேசு கருப்பையா, நாணல் நண்பர்கள் தமிழ்தாசன், வழக்கறி ஞர் தீரன் திருமுருகன் உள்ளிட்ட எண்ணற்ற சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயல் பாட்டாளர்கள் பங்கெடுத்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இது அமைவதால் ஏற்படப்போகும் கடல் வளம் – ஆறு -விவசாயம் -தொல்லியல் சின்னங்கள்- ஆலயங்கள் சரணாலயங்கள்- சுற்றுச் சூழல்-மக்களின் உடல்நலம் பற்றிய பாதிப்புகளைப் பற்றி கேள்வி எழுப்பி, தங்கள் எதிர்ப்பை கடு மையாக பதிவு செய்தனர். அப்பொழுது அரசு மற்றும் ஓஎன்ஜிசி தரப்பில் அதிகாரிகளில் ஒருவர் கூட பதில் சொல்ல முடியவில்லை.
2015 கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த 22 எண்ணெய் கிணறுகளை B2 வகைக்கு மாற்றி சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை யென. இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் பல்வேறு புதிய புதிய சட்ட திருத்தங்களைச் செய்தும், பத்தாண்டுகளுக்கு முன் பெற்ற அனுமதியை வைத்தும் தற்போது இந்திய அரசு இத் திட்டத்தை நடைமுறைப் படுத்த முயற்சிக்கிறது. ஓஎன்ஜிசியின் இந்த திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தும் போது கடலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவ சாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்படும். தற் போது நாடு முழுவதும் கொரோனா நெருக் கடியையொட்டி ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் , இந்திய அரசால் பின்வாங்கப்பட்ட நாசகார அழிவுத் திட்டங்களை தமிழகத்தில் ஒவ்வொன்றாக அலாக்கத் தொடங்குவது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.
7 ஆம் கட்ட ஆய்வில் இருக்கும் அழகன் குளத்தில் ஓஎன்ஜிசி ஆய்வு என ஆழத் தோண்டி மண் ணையும், நிலத்தடி நீரையும் சீரழிக்கும் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். உலகின் தலை சிறந்த வைகைக் கரை நாகரீகம் பற்றி மதுரை, கீழடி, மணலூர், கொந் தகை, அழகன்குளம் எனத் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு அடா வடியாக காவல்துறையை வைத்து ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணிகளை அனுமதிப்பது என்பது தமிழர்களின் தொன்மையை அழிக்கும் செயலாகும். அழகன் குளம், ஆற்ற ங்கரை ஊராட்சி பகுதிகளில், கடலோரப் பகுதிகளில் எந்தவித அறிவிப்பும் மக்களுக்கு கொடுக் காமல், திட்டம் நடைபெறும் பகுதிகளில் அறிவிப்பு பலகையோ-திட்டத்தைப் பற்றி விளக்கம் எதுவும் வைக்காமல் யாரோ கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகள் போல கிராமத்திற்குள் புகுந்து ஓஎன்ஜிசி யினர் பணிகளை மேற்கொள்ள காவல்துறை துணையோடு அட்டகாசம் செய்து வருகி ன்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி உள்ளிட்ட கட லோரப் பகுதிகளிலும் விவசாய பகுதிகளிலும் மீனவர்கள் மற்றும் உழவர்களின் வாழ்வாதாரத் தை அழித்து, சுற்றுச்சூழலை நாசமாக்கி, அழகன் குளம் போன்ற தொல்லியல் சின்னங்களை அழி த்து, ராமேஸ்வரம் கோயிலுக்கு கூட ஆபத்து ஏற்படுத்த இருக்கும் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு ஆய்வு என்ற கிணறுகள் தோண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி யை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தது போல, மிக முக்கியமான உயிர்கோள பகுதியான மன்னார் வளை குடா அமைந்துள்ள இப்பகுதியை “கடல் பாதுகாப்பு மண்டலமாக” அறிவித்து தமிழக அரசு பாது காக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சு இராசேசு கண் ணன், நா சண்முகம், தோழர்.மோகன்ராசு ஆகியோர் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார்கள்