இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. பொறுப்பேற்றுக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. 15.11.2020 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப் பேற்றுக் கொண்டார். அன்னாரி டத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கொ.வீர ராகவராவ். இ.ஆ.ப. பொறுப்புகளை ஒப்படைத்தார். அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தின் 23-வது மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பு ஏற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழ்நாடு அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற் கொள்ளப் படும். இராமநாதபுரம் மாவட்ட த்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக் கைகள் சிறப்பாக மேற்கொள்ளபட்டதன் காரணமாக வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து எவ்வித தொய்வும் இன்றி மேற்கொளளப்படும். இராம நாதபுரம் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பினை அதிகரித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். இ.ஆ.ப. தொpவித்தார். இந்த நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை எம்.பிரதீப் குமார். இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமி இராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா. இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ஜி.கோபு உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.