இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16.01.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்ரின் உத்தரவின்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கோவிட் நோய்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவில் ‘கொரோனா தடுப்பூசி” போடும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரமக்குடி அரசு மருத்துவமனை பார்த்திபனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கீழத்தூவல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி துவக்க முகாம் நடைபெற்றது. இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேல் சென்று பாh;வையிட்டாh;. கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு கோவின் செயலியில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும் . இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று வரை 7172 அரசு சுகாதார பணியாளர்களும் 2684 தனியார் மருத்துவமனை பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இராமநாதபுரம் மாவட்டத்தில் 8300 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருந்துகள் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது . தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முந்தைய தினமே தடுப்பூசி போடப்படும் தேதி நேரம் மற்றும் இடம் குறித்து சம்பந்தப்பட்ட பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தடுப்பூசி பெறுவதற்கு செல்லும் சுகாதார பணியாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்து செல்வது அவசியமாகும் . முதல் தடுப்பூசி போட்ட பின்பு இரண்டாவது தவணை தடுப்பூசி 28 நாட்களுக்கு பிறகு வழங்கப்படும் . முதல் தடுப்பூசி போட்ட உடனேயே இரண்டாவது தடுப்பூசி தேதி குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும் . இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னர் டிஜிட்டல் சான்றிதழுக்கான இணைய தொடர்பு ( டுiமெ ) அனுப்பப்படும் . முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மற்றும் நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .
இந்த நிகழ்வின் போது இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.எம்.அல்லி மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் மரு.ஏ.சகாய ஸ்டீபன்ராஜ் சுகாதாத்துறை துணை இயக்குநர்கள்; மரு.செந்தில்குமார் (இராமநாதபுரம்) மரு.பி.இந்திரா (பரமக்குடி) மாவட்ட தாய் சேய் நல அலுவலா; மரு.ஜி.பத்மா இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளார்; மரு.பி.கே.ஜவஹா;லால் உட்பட மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்