இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆர்.எஸ்மங்கலம் நயினார்கோவில் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகச் சென்று தொடந்து பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார்.
மாவட்டத்தின் சராசரி மழை அளவு 827 மி.மீ ஆகும். மாவட்டத்தில் 2019-ஆம் ஆண்டில் 914.25 மி.மீ. 2020- ஆம் ஆண்டில் 845.36 மி.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவாp மாதத்தில் இதுவரை 137.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் நடப்பாண்டில் 133709 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடா;ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 16 மழைமானிகளில் 10.01.2021 அன்று மொத்தம் 326.90 மி.மீ அளவும் சராசரியாக 20.43 மி.மீஅளவும் 11.01.2021 அன்று மொத்தம் 489.80 மி.மீஅளவும் சராசரியாக 30.61 மி.மீஅளவும் 12.01.2021 அன்று மொத்தம் 481.70 மி.மீஅளவும் சராசரியாக 30.11 மி.மீஅளவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக திருவாடானை ஆர்.எஸ்மங்கலம் நயினார்கோவில் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பெய்த தொடா; மழையின் காரணமாக அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் ஆதியூர் இளையான்குடி ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் காவனக்கோட்டை நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காரடர்ந்தகுடி கடலாடி ஊராட்சி ஒன்றியம் உச்சிநத்தம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மழை நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அறுவடை நேரத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கே.குணபாலன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ. முனியசாமி வேளாண்மைத் துறை துணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.