பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக நாஃப்தலி பென்னட் 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் நாப்தலி பென்னட்டுக்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஏழு ஆசனங்களைக்கொண்ட ஒரு சிறிய கட்சியின் தலைவரான நாப்தலி பென்னட் பிரதமராக பதவியேற்ற நிலையில், பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக்கொண்ட பெஞ்சமின் நெத்தன்யாகு தனது பன்னிரெண்டு வருடகால ஆட்சியை இழந்தது ஓர் ஆச்சர்யமான விடயமாகும். கடும்போக்குவாத இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பெற்றியுள்ள புதிய பிரதமர் தனது கொள்கையுரையில், “ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.