உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும்வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க இருக்கிறது. மிகப்பெரிய மின்மயமாக்கல், தண்ணீர் மற்றும் காகிதசேமிப்பு, ரயில் பாதைகளில் அடிபடாமல் விலங்குகளைபாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்தியரயில்வே எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்குஉகந்த மற்றும் மாசை குறைக்கும் ரயில்வேமின்மயமாக்கல், 2014-ம் ஆண்டில் இருந்து பத்து மடங்குஅதிகரித்துள்ளது. சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் ரயில் போக்குவரத்தின்மூலம் பெருந்தொற்றின் போது உணவு தானியங்கள்மற்றும் ஆக்சிஜன் நாடு முழுவதும் எடுத்துசெல்லப்பட்டது. இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளுக்காகஜூலை 2016-ல் இந்திய ரயில்வே மற்றும் இந்தியதொழில் கூட்டமைப்புக்கு (சிஐஐ) இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 39 பணிமனைகள், 7 உற்பத்தி மையங்கள், 8 லோகோஷெட்கள் மற்றும் ஒரு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கு‘கிரீன்கோ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும். 19 ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழ்கிடைத்துள்ளது. 3 பிளாட்டினம், 6 தங்கம் மற்றும் 6 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும். 27 ரயில்வேகட்டிடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் இதரஇடங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 15 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள்இவற்றில் அடங்கும்.இதைத் தவிர, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை கடந்த 2 வருடங்களில் 600 ரயில்நிலையங்கள் பெற்றுள்ளன. மொத்தம் 718 ரயில்நிலையங்கள் ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை பெற்றுள்ளன.