“பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்” மற்றும் “திருமுருகன்” இருவரும் தயாரிப்பாளர் களாக களமிறங்கும் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் விமல் மற்றும் ரோபோ சங்கர் கலந்துகொண்டனர்,
விமல் பேசுகையில் இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன் 3 பாடல் உள்ளது மூன்றும் அருமையாக உள்ளது அதிலும் அம்மா பாட்டு மனதை உருக்கும் பாடலாக உள்ளது, அதுமட்டுமில்லாது விஸ்சுவல்சும் நன்றாக இருந்தது மேலும் இசையை கச்சிதமாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒரு பாடல் எப்படியோ அதை வைத்து அந்தப் படத்தை முடிவு செய்ய முடியும் இந்த பாடல்களை பார்க்கும்போது படம் அருமையாக இருக்கும். அதேபோல் படமும் அருமையாக இருக்கும் என் நினைக்கிறேன், இதுமட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் உள்ளது. இதில் இயக்குனர் கெவினுக்கு முதல் படம். ஆனால் பார்த்தால் உங்களுக்கு முதல் படம் மாதிரி தெரியாது. அவ்வளவு அழகாக வடிவமைத்திருக்கிறார் எனது பங்காளி மற்றும் களவாணி2 வில்லனுமான துரை சுதாகர் நிலா புரமோட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மற்றும் இணை தயாரிப்பு திருமுருகன், பாலகிருஷ்ணன், விஸ்லின், TN 75 கே கே கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு விமல் கூறினார்…
நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில் இவ்வளவு அருமையான படத்தில் 3 பாடல் அமைத்ததில் என்னவோ கம்மிதான் ஆனால் அதை கேட்பார் போல் அம்சமாக அமைந்துள்ளது அதுமட்டுமின்றி கானா பாடல் ஒன்று உள்ளது காதல் தோல்விக்கு ஏற்பட்ட வலியை உணர்த்தும் பாடலாக எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தின் இசையமைப்பாளர் “ஜெய்தன்” மற்றும் “வர்ஷன்” இவர் யார் என்றாள் ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடென்ட் அமெரிக்கா சென்று பியானம் போட்டியில் முதலிடம் பெற்ற சிறுவனின் தந்தை தான் இந்த வர்ஷன். இவருடைய மகன் அமெரிக்கா சென்று விருது பெறும்போது அவருடைய தந்தை இவருக்கு இந்த பாடல்களுக்காக அமெரிக்காவில் விருது இல்லை என்றாலும் நம்ம நாடு தேசிய விருதுதாவது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், மற்றும் படத்தை தயாரித்த துரை சுதாகர், திருமுருகன் உங்கள் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைய வேண்டுகிறேன்.. இவ்வாறு ரோபோ சங்கர் கூறினார்.
இயக்குனர் கூறுகையில் இது என்னோட முதல் படம் எல்லாரையும் போல் நானும் கஷ்டப்பட்டுத்தான் வந்தேன், எனக்கு உதவிய தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளர் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,டிசம்பர் மாதம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளோம். அணைத்து பத்திரிக்கை நண்பர் களின் உதவி எனக்கு வேண்டும், நீங்கள் தான் இந்த படத்தை கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும் இவ்வாறு இயக்குனர் கூறினார்.. இப்படத்தின் இசைத்தட்டை விமல் வழங்க ரோபோ சங்கர் பெற்றுக்கொண்டார்.