எர்ணாவூர், விம்கோ நகர், 2வதுதெரு, எண்.34/10 என்ற முகவரியில் பரத், வ/20, த/பெ.ரஜினிகாந்த், என்பவர் வசித்து வருகிறார். பரத் 01.04.2021 காலை 9.00 மணி யளவில் எர்ணாவூர், பிரிட்ஜ் டவுன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டி ருந்த நபர், மேற்படி பரத்தை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார். பரத் கூச்சலிட அருகிலிருந்த பொதுமக்கள், செல் போன் பறிக்க முயன்ற நபரை மடக்கிப்பிடித்தனர். தக வலறிந்த M-5 எண்ணூர் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசா ரணை செய்தனர். M-5 எண்ணூர் காவல் நிலைய ஆய் வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசா ரணையில் பிடிபட்ட நபர் பார்த்திபன், வ/19, த/பெ.குமார், எண்.12, சுனாமிகுடியிருப்பு, எர்ணாவூர் என் பது தெரியவந்தது விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட பார்த்திபன் நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப் படவுள்ளார்.