எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது

சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம் கார்டன் எண்.7/1 என்ற முகவரியில் நவீன்குமார், வ/29, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நவீன்குமார் நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை, ஜவர்ஹர்லால் நேரு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு அருகில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்கள் சிகரெட் பிடித்து புகையை நவீ ன்குமார் மீது விட்டுள்ளனர். உடனே நவீன்குமார் இதை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட வாய் தகராறு முற்றி யதில் மேற்படி நபர்கள் நவீன்குமாரை தாக்கிவிட்டு அவரிடமிருந்து 2.5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர். காயமடைந்த நவீன் குமார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற் றுள்ளார். இது குறித்து நவீன்குமார் R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழ க்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய் வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசா ரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.முரளி, வ/31, த/பெ.தீனதயாளன், தாலுகா ஆபிஸ் பின்புறம், கே.கே.நகர் 2.லோகு, வ/22, த/பெ.செல்வம், தாலுகா ஆபிஸ் பின்புறம், கே.கே.நகர், 3.ஏழுமலை, வ/19, த/பெ. கதிரேசன், தாலுகா ஆபிஸ் பின்புறம், கே.கே.நகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களை விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து 2.5 சவரன் தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முரளி மீது வழிப் பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த ப்பட வுள்ளனர். 2 இளஞ்சிறார்கள் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.