எழும்பூர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., இ.ஆ.ப., அதிகாரிகள் ஆய்வு!

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அமையப்பெறவுள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை,
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் ஆகியோர் ஆய்வினை மேற்கொண்டனர். உடன் மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப , எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை தலைவர் டாக்டர் விஜயா மற்றும் மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.