ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டையில்  நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழிந்த ஆயுள் சிறைவாசிகளையும் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையிலும், நீதியின் அடிப்படையிலும், பாரபட்சம் பாராமல் தமிழக அரசு அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி  கோரிக்கை மனு அளித்தார். கடந்த காலத்தில் சிறைவாசிகள் விடுதலையில் நிகழ்த்தப்பட்ட பாரபட்சங்கள் கடந்து, மாநில அரசு தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி  கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், ஏழு தமிழர்கள் உட்பட 10 ஆண்டுகள் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும்  தமிழக அரசு கருணையின் அடிப்படையில் பாரபட்சம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாரபட்மின்றி நெருக்கடிகள் இல்லாத பரோல் நடைமுறையையும் அவர்களுக்கு சாத்தியமாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆவன செய்வதாக  உறுதியளித்தார்.