சென்னை ஜூன். 14.:- மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 118வது வட்டம், புதுப்பேட்டை கார்டன் தெருவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான தயாநிதி மாறன் வழங்கினார். உடன் சென்னை மேற்கு மாவட்டப் திமுக பொறுப்பாளர் நே. சிற்றரசு, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா எழிலன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்..