ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி

தமிழகத்தில் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின் பிரிவு 12 (1) (சி) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது பூமி தொண்டு நிறுவனம். இந்த பிரிவு தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கு 25% இட ஒதுக்கீடு அளிக்கிறது. மக்களிடையே இது குறித்து விழிப் புணர்வு இல்லாததால், கிட்டத்தட்ட 50% இடங்கள் 2019 இல் நிறைவு பெறாமல் இருந்தன. பூமியின் இணை நிறுவனர் டாக்டர் பிரஹலாதன் கே.கே கூறுகையில், “தனியார் பள்ளிகளில் இலவச இடங்களை தமிழக அரசு போதுமான அளவு ஒதுக்கியுள்ளது. பெற்றோரின் வருடாந்திர வருமானம் ஆண்டுக்கு ரூ .2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், ஆர்.டி.இ (கல்வி உரிமை சட்டம்) மூலமாக பயன் பெறலாம். அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த சலுகையைப் பற்றி பலருக்குத் தெரியாததால் இந்த பிரிவின் மூலம் மற்றவர்களால் பயன் பெற முடியவில்லை. கல்விக் கட்டணம் செலுத்த அவர்கள் கடன் வாங்குவதால், அவர்கள் அதிக நிதி நெருக்கடி மற்றும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். பூமி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இதுபோன்ற விழிப்புணர்வு இடைவெளிகளைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதும், ஏழைக் குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெற உதவுவதும் ஆகும். குழந்தைகளை இச்சட்டத்தின் மூலமாக சேர்க்கை பெறவைக்க வைப்பதில் நாங்கள் மிகுந்த முயற்சி செய்தோம், தொடர்ந்து அதைச் செய்கிறோம். இந்த 25% இடஒதுக்கீடு பற்றி தெரிந்துகொள்ள எங்களை அணுகுமாறு பெற்றோர்களையும், தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் சேர்க்க ஆர்வமுள்ளவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ” கடந்த ஆண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நடிகர் சித்தார்த், நடிகை வரலட்சுமி சரத்குமார், பாடகி சைந்தவி, இசைக்கலைஞர் ஜி.வி.பிரகாஷ், கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, சமூக செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் ஆதரவை வழங்கினர். மக்கள் தொடர்பு: வின்சன்.