ஒளி உமிழ்வை ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் இந்திய விஞ்ஞானி

குவாண்டம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஒளி உமிழ்வை ஒற்றை துகளான ஒளியணுவாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயற்பியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் வி. நாயர் இந்த முயற்சியில் ஓரளவு வெற்றி அடைந்துள்ளார். இவர் இந்தாண்டு ஸ்வர்ண ஜெயந்தி கல்வி உதவித் தொகையைப் பெற்றவர்.