ஓட்டல்களை காரணம் காட்டி மக்கள் வெளியே நடமாட்டம் – கட்டுக்குள் வருமா கொரோனா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று ஓட்டல்களில்  பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்து.  மக்கள் வெளியே சுற்றி வருவதை அறிந்த காவல்துறையினர் அவர்களை விசாரிக்கும் பொழுது சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக வெளியில் வந்தோம் என்று சாதாரணமாக கூறிச் செல்கின்றனர். தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 குடும்ப தலைவிகளுக்கு 1000 அரிசி பருப்பு சமையல் எண்ணெய் சர்க்கரை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினாலும் வீட்டில் யாரும் சமைப்பதில்லை. மக்கள் அனைவரும் ஓட்டல்களை நாடி செல்கின்றனர் என்று காவல்துறையினர் புலம்புகின்றனர். பொறுப்புடன் தனிமைப்படுத்திக் கொள்ளும் மக்களிடையே வேதனையை அளிக்கிறது.