ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.   

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர்.

பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது. 

இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது. 

 

இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.  

2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது.