ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் “காகித பூக்கள்” படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் ஒட்டன்சத்திரம், பழனி, சந்திர பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. அந்த சமயம் கொரோனாவின் தாக்கம் உருவானதால் மத்திய மாநில அரசுகள் கண்டிப் பான ஊரடங்கை அறிவித்தன. இதனால் காகித பூக்கள் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் ஊரட ங்கின் தளர்வு அறிவித்த பின் தொடர முடிவு செய்து படப்பிடிப்பு குழுவினருடன் ஊர் திரும்பி னார்.
செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தியது. படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் அறிவித்தது. உடனே படப்பிடிப்பு நடத்த இயக்குனர் முடிவெடுத்து அதற்கான பணிகளை துவக்கினார். அவருக்கு கதாநாயகனை பார்த்ததும், “என்ன லோகன் இவ்வளவு குண்டாகிட்டே. சூட்டிங் போகணுமே ஏற்கனவே 5 மாதம் கடந்து விட்டது என்று கூற, “பத்து நாள் டைம் குடுங்க பழையபடி அதே உடம்பை தயார் செய்து விடுகிறேன் என்று லோகன் கூறியதும், “இந்த மாசம் (செப்டம்பர்) 15 ஆம் தேதி நாம் சூட்டிங் போகலாம். அதுக்குள்ள குறைச்சிடுவியா?” என்று கேட்டார். “கண்டிப்பா குறைச்சிடுவேன் என்று கூறி கடந்த சில நாட்களாக கடுமையான உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் கதாநாயகன் லோகன். மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 15 ஆம் தேதி முதல் திண்டுக்கல்லில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சியில் வளருகிறது.
கதையின் நாயகனாக லோகன் அறிமுகமா கிறார். இன்னொரு நாய கனாக பிரவீண்குமார் நடிக்கிறார். ப்ரியதர்ஷி னி கதாநாயகியாக நடிக் கும் இதில் தில்லை மணி, தவசி, ரேகா சுரே ஷ், அலெக்ஸ், பாலு மற்றும் பலர் நடிக்கின் றனர். இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபா ஸ்கர் ஒளிப்பதிவு செய் ய, சுதர்சன் படத்தொகுப் பையும், ஆக்ஷன் பிரகா ஷ் சண்டைப் பயிற்சி யையும், ஸ்ரீ சிவசங்கர் மற்றும் ஸ்ரீ செல்வி இரு வரும் நடன பயிற்சி யையும், பாலா கலை யையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாக பொறுப்பையும் ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி தயாரித்து “காகித பூக்கள்” படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் முத்துமாணிக்கம். விஜயமுரளி கிளாமர் சத்யா PRO