கனடாவில் ஈழத் தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் பகுதியான மார்க்கம்-ஸ்காபுறோ ஆகிய நகரங்கள் இணையும் பகுதிக்கு மிக அண்மையில் Majestic City என்னும் ஒரு தென்னாசிய வர்த் தக வளாகம் திறந்து வைக்கப்பெற்றது. திரு கிறிஸ் சிவக்கொழுந்து என்னும் தமிழ் பேசும் அன் பரை திட்ட முகாமையாளராகக் கொண்டு நீண்ட நாடகள் கடுமையாக அர்ப்பணிப்புடன் உழைத் து இந்த வர்த்தக வளாகம் நிஜமாகியுள்ளது. ஸ்காபுறோ நகரில் Majestic City என்னும் பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்தபிரமாண்டமான தென்னாசிய வர்த்தக பெருநிலையம் கடந்த சனிக்கிழ மையன்று திறந்து வைக்கப்பெற்றது. பிரதம விருந்தினராக ஒன்றாரியோ மாகாண அரசின் முதி யோர் மற்றும் அவர்களின் வசதிகள் பேணல் அமைச்சரும் தமிழ் மக்;களின் நண்பருமான கௌர வ றேமண்ட் சோ அவர்கள் தனது ஏனைய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
சுமார் 180 வர்த்தக நிலையங்களைக் கொண்ட இந்த Majestic City வர்த்தக வளாகம் மிகவிரைவில் நன்கு வளர்ச்சி பெற்ற ஒன்றாக மிளிரும் என்றும் அங்கு கலந்து கொண்ட அனைத்து பிரமுகர் களும் வாழ்த்திச் சென்றனர். பல ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பிரதம ஆசிரியர்களும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிகளும் கலந்து கொண்டு உற்சாகம் ஊட்டி நின்றனர். ஸ்காபுறோ நகரில் மார்க்கம்- மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் இந்த பிரமாண் டமான Majestic City வர்த்தக வளாகம் காட்சிகளிக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி: கனடா உதயன் செய்திப் பிரிவு