- கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “கபடதாரி படத்தை நாங்கள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், கொரோனா பிரச்சினையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.
ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் தான் படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். ரசிகர்கள் அனைவரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் வேகமாக இருக்கும். பட தொடங்கிய உடன், இடைவேளை வந்தது போல இருக்கும், பிறகு க்ளைமாக்ஸ் வந்துவிடும். அந்த அளவுக்கு படம் கச்சிதமாக வந்துள்ளது. இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்க தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் தான் என்னிடம் நானே நடிக்கிறேன், என்று கூறினார். பிறகு யோசித்தேன், நாம் வேறு ஒரு ஹீரோவுடன் அலைவதைவிட, நம் படத்தில் நடிக்கும் சிபிராஜையே நடிக்க வைக்கலாம் என்று. சிபிராஜ் இந்த படத்திற்கு கச்சிதமாக இருக்கிறார். அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. நந்திதா ஸ்வேதா ரெகுலர் நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சைமன் கே.கிங் பெரிதும் பாராட்டப்படுவார். இந்த படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானதும் அவருக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தற்போது ஒரு படத்தில் ப்பந்தமாகி யிருக்கிறார். தமிழிலும் அவர் முன்னணி இசையமைப்பாளராக வருவார். அந்த அளவுக்கு படத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. எனக்கு பல நேரங்களில் உதவி செய்தவர் சிவா சார். நான் சினிமா இண்டஸ்ரிக்கு வந்ததில் இருந்து அவர் நிறைய உதவி செய்துள்ளார். அவருக்கு நன்றி. ஜெயப்பிரகாஷ், நாசர் என அனைவரின் வேடமும் சிறப்பாக வந்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் தொடர்ந்து பயணிக்கிறேன். இனியும் தொடர்ந்து அவருடன் பல படங்கள் பணியாற்ற இருக்கிறோம். விழாவுக்கு வந்ததற்கு அவருக்கு நன்றி. ‘கபடதாரி’ எங்களுக்கு மட்டும் அல்ல சிபிக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார். நடிகர் சிபிராஜ் பேசியதாவது, “கொரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது தான்.கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல்துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு
ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை ஒட்டி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே, தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன். ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன், என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படினா நானே நடித்து விடுகிறேன், சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என் உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தனஞ்செயன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எறும்பு போல சுறுசுறுப்பானவர். சில நேரங்களில் ஷார்ட்டுக்கு கூட என்னை அழைக்க அவரே வந்துவிடுவார். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் படு சுறுசுறுப்பாக இருப்பார். அனைத்து பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். ஒரு முறை படப்பிடிப்பில் ஒரு பழைய காரை வைத்து படம்பிடித்து வந்த போது, அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. அடுத்த ஷாட்டுக்காக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது, அவரே அந்த காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அவரால் தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன், ரொம்ப நன்றி சார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. பொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று
நினைப்பார்கள், இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப். நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது, ஏற்கனவே அவருடன் பணியாற்றியதால், - நாங்கள் வைத்திருந்த மீட்டரிலேயே நடித்தேன். ஆனால், அதை அவர் சற்று மாற்றி வேறு ஒரு விதத்தில் என்னை நடிக்க வைத்தார். அது எனக்கு நாசர் சார் போன்ற ஜாம்பவனுடன் இணைந்து நடிப்பதற்கு ஈசியாக இருந்தது. அதேபோல் ஜெயப்பிரகாஷ் சார், நந்திதா ஆகியோருடன் நடித்து நன்றாக இருந்தது. எடிட்டர் பிரவீன், இசையமைப்பாளர் சைமன் ஆகியோரது பணிகள் பெரிதும் பேசப்படும். இந்த படத்திற்கு சைமன் மிகப்பெரிய் உழைப்பை கொடுத்திருக்கிறார். அது படம் பார்க்கும் போது தெரியும். பிரவீன் பணியாற்றும் படங்களில் எங்கேயாவது லேக் இருந்தால் அதை உடனே தூக்கிடுவார். ஆனால், இந்த படத்தில் எந்த காட்சியையும் அவர் தூக்கவில்லை. அந்த அளவுக்கு காட்சிகள் நேர்த்தியாகவும், எந்த ஒரு லேகும் இல்லாமல் இருந்ததாக பிரவீன் கூறினார். அதுவே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு விஜய் ஆண்டனி சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இயக்குநர் பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததே அவர் தான். அனைத்து
படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். அப்படி தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக் நேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார். - இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரன் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார், அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி. படத்தின் இரண்டாவது ஹீரொ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்ரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள். சமீபத்தில் வெளியான ‘கபடதாரி’ டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, மிகப்பெரிய எதிர்ப்பார்ப் பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரை யரங்குகளில் படம் வெளியாகிறது.டி.ஒ மக்கள் தொடர்பாளர்: டி.ஒன்.