தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவரது மனைவி அல்லது குழந்தைகளாகிய வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்குகின்றது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இறந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளில் கல்வி தகுதிக்கேற்ப 270 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பதவிக்கான பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட இறந்து போன காவல்துறையினரின் 270 வாரிசுகளுக்கு தகவல் பதிவு உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 13.01.2021 அன்று காவல் ஆணையரகத்தில் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சி யில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், இ.கா.ப., இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) ஆர்.சுதாகர், இ.கா.ப., துணை ஆணையாளர் (நிர்வாகம்) பெரோஸ்கான் அப்துல்லா, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.