பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச அங்கீகார “அபெ ட் ” நிறுவனம் (ABET),1992 ,அமெரிக்காவில் நிறுவப்பட்டு இதுவரை,32 நாடுகளில் உள்ள 812 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்,4144 பாடத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது. கலசலிங்கம் பல்கலை யில் ,ஆட்டோமொபைல்,மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், மின் மற்றும் மின்னணுவியல்,மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, உணவு தொழில் நுட்பம், பயோ டெக்னாலஜி, பயோமெடிக்கல், கெமிக்கல், மற்றும் சிவில் ஆகிய 11 பாடத்திட்டங்களுக்கு, அபெட் தரச்சான்றிதழ் பெற விண்ணப்பித்து, 17 கல்வி மற்றும் தொழிற்சாலை நிறுவன அமெரிக்க வல்லுநர் குழு, 2019,நவம்பர் 10 முதல் 12 முடிய 3 நாள் வருகைதந்து வளாகத்தை பார்வையிட்டது.
இந்த குழு,பல்கலை மத்திய நூலகம்,துறை நூலகங்கள்,ஆய்வரங்கம்,விடுதிகள்,பொது வசதிகளையும் பார்வையிட்டு மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் வேலைவாய்ப்பு வழங்கிய தொழிற்சாலை அதிகாரிகள் பாடத்திட்ட வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் பாதுகாப்பு நடைமுறைகள் 4 ஆண்டுகள் படித்த பின் மாணவர்கள் பெறும் திறன் இவற்றை ஆராய்ந்தனர். பின்பு 2020 ஆகஸ்ட் 26 அன்று அபெட் கவுன்சில் 11 பாடத் திட்டங்களுக் கும் தரச்சான்று வழங்கி பாராட்டியுள்ளது. இந்த அங்கீகாரம் மூலம் கலசலிங்கம் பல்கலை புதிய கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு வழிவகுக்கும் மாணவர்களை தொழிற் சாலையில் நுழைந்து உடனடி வேலைக்கு தயாராகும் பட்டதாரிகளாக உருவாக்கும் என்பது திண்ணம். பல்கலை துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் கூறுகையில், அபெட் சர்வ தேச தரச் சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சான்றிதழ் பெற்ற 11 பாடத் திட்டங்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பெற்று கலசலிங்கம் பல்கலைக்கழகம் இந்திய அளவில் சாதனை புரிந்துள்ளது. மேலும் இந்த பி.டெக் மாணவர்களுக்கு வெளி நாடு களில் வேலைவாய்ப்பிற்கும் உயர் படிப்புக்கும் உடனடி அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினார். வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் துணைவேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன் துணை தலைவர எஸ் அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் சர்வதேச அங்கீகாரம் பெற்றமைக்கு உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் பாராட்டினர்.