“காகித பூக்கள்” படக் குழுவினரை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள்

கொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் “காகித பூக்கள்” படக் குழுவினர் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக் குழுவினரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து வர விடாமல் தடுத்து விட்டனர். எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மொத்த யூனிட்டையும் பொள்ளாச்சியில் தங்க வைத்து விட்டு இயக்குனரும் தயாரிப்பாள ருமான .முத்துமாணிக்கமும் தயாரிப்பு நிர்வாகியான சுப்ரமணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வர வழைத்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தனர்.
அந்த ஊர் அப்படி என்றால் இந்த ஊர் இப்படி . . . (நாகரீகம் கருதி பொள்ளாச்சி – அருகே உள்ள கிராமத்தின் பெயரை குறிப்பிடவில்லை) முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட “காகித பூக்கள்” திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வர உள்ளது.

மேலும் படத்தைப் பற்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகும் முத்துமாணிக்கம் கூறியவதாவது:- “ஒருவனின் காதலி இன்னொருவனின் மனைவியாகலாம். அதே சமயம் ஒருவனின் மனைவி இன்னொருவனின் காதலியாக முடியாது. அப்படி ஆனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கவிதையாக சொல்லும் படம் தான் “காகித பூக்கள்” இதில் புதுமுகங்கள் லோகன் பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லைமணி தவசி பாலு ரேகாசுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத்தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலையையும், ஸ்ரீ சிவசங்கர் ஸ்ரீ செல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது.. இது என்னோட முதலாவது படம்.” என்றார் முத்துமாணிக்கம். மக்கள் தொடர்பு விஜயமுரளி கிளாமர் சத்யா