அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில்காவல் துறையினருக்கான கோவிட்-19 கேர்சென்டரில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துசிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை நேற்று (04.06.2021) சென்னைபெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கவச உடை அணிந்து நேரில் நலம் விசாரித்து, ஆறுதல் கூறியும்பழத்தொகுப்புகளையும் வழங்கினார்.
அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுசிகிச்சையில் இருந்த தலைமைக்காவலர் K.சிகாமணிஎன்பவரது 10 வயது மகளான ஸ்ருதி என்ற பெண்அவரது தாய் தேவியுடன் கொரோனா நோய் தொற்றுசிகிச்சை பெற்று வந்த சிறுமி ஸ்ருதி தான்தனிமைபடுத்தப்பட்ட நாட்களில் பாதிக்கப்பட்டநிலையிலும் முன்களப்பணியாளர்களாக அரிப்பணிப்புஉணர்வுடன் பணி செய்து மக்களை காத்துவரும்மருத்துவ துறையினர், காவல் துறையினர் மற்றும்சுகாதார அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தான் வரைந்த “THANK YOU WARRIORSSAVING – OUR LIVES” என்ற வாசகம் கொண்டஓவியத்தை கவச உடையில் ஆறுதல் கூற வந்த காவல் ஆணையரிடம் நேரில் வழங்கி தனது நன்றியைநெகிழ்வுடன் தெரிவித்தார். இந்த ஓவியம் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.